மாணவர்கள்,
அவநாசி அருகே ஏற்பட்ட விபத்தில் பலியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலத்தில் இருந்து ஊட்டிக்கு
காரில் சுற்றுலா சென்றுள்ளனர் ஒரு குறிப்பிட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர்கள்.
ஓட்டுனர் உட்பட சுமார் 8 பேர் அந்த காரில் பயணித்துள்ளனர்.
சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை
திருப்பூர் மாவட்டம் பழங்கரை அருகே கார் சென்று கொண்டிருந்த போது சற்றும்
எதிர்பாராமல் முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 5 மாணவர்கள் மட்டும் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட மீதமிருவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீஸார் விபத்து குறித்து
விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக