Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 மார்ச், 2020

இந்த இரண்டு வழியில் நீங்க எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

Image result for இந்த இரண்டு வழியில் நீங்க எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

னந்த் என்ற இளைஞன் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு தாகம் ஏற்பட்டது. ஆனால், அது பாலைவனம் என்பதால் அருகில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போல ஒன்று அவன் கண்ணில் தென்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்றான்.

அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் இருந்த ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தது. அந்த ஜக்கிற்கு மேலே இருந்த ஒரு அட்டையில் 'ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்" என்று யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது என்று ஆனந்த் யோசித்தான்.

தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒருவேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் 'தானே" காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்த பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

தத்துவம் :

உங்களுக்கு அவசர கட்டத்தில் தேவைப்படும் ஒன்று மற்றவர்களுக்கு உடனே தேவைப்படவில்லை என்றாலும், ஏதாவது ஒரு நாள் கண்டிப்பாக தேவைப்படும். ஆகவே, 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக