பெண்ணிற்கு
மட்டும் தான் கன்னித்தன்மை என்ற ஒரு சொல் கூறப்பட்டு வருகிறது. ஏனோ பெண்ணின் கன்னித்தன்மைக்கும்
நம் புராணங்களுக்கும் இடையே ஏராளமான தவறான எண்ணங்களும் கட்டுக் கதைகளும் மக்களிடையே
அன்றிலிருந்து இன்றுவரை பூசப்பட்டு வருகிறது. பெண்களின் இந்த கன்னித் திரை பற்றி தவறாக
புரிந்து கொள்வது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயமாக
உள்ளது. கன்னிதிரை என்பது பெண்களின் யோனி பகுதியில் உள்ள ஒரு மெல்லிய சவ்வு. இதை ஹைமன்
என்ற பெயரால் அழைக்கின்றனர்.
கன்னித்திரை
ஒரு
பெண்ணின் கன்னித்திரை உடலுறவு கொள்வதால் மட்டும் கிழிக்கப்படுவதில்லை. குதித்து
விளையாடுவதால், சைக்கிள் ஓட்டுவதால், கனமான வேலைகளை செய்யும் போது போன்ற பல
காரணங்களால் அந்த ஹைமன் சவ்வு கிழிகிறது. இதை புரிந்து கொள்ளாத மக்கள் அந்த பெண்
கன்னித்தன்மை இழந்ததாக குற்றம் சாட்டுவது, சமூகத்தில் தவறாக பார்ப்பது, திருமண
வாழ்க்கையில் சிக்கல் போன்ற ஏராளமான பிரச்சினைகளை அவர்கள் சந்தித்து வருகிறார்கள்.
இந்த கன்னித்திரை பற்றி பெண்கள் ஆண்கள் இருபாலருமே அறிந்திருப்பது அவசியமாகிறது
என்கிறார்கள் மருத்துவர்கள். எதாவது விபத்தாக கன்னித்திரை கிழிந்து விட்டால் அதை
மீண்டும் பெற முடியுமா, என்பதற்கு மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இங்கே
பார்க்கலாம்.
கன்னித்திரைக்கும் கன்னித்தன்மைக்கும் சம்பந்தம் இருக்கா?
அந்தக்
காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை ஒரு பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும் போது
தான் கன்னித்திரையில் கிழிசல் உண்டாக வேண்டும். அப்பொழுது ஏற்படுவது தான்
கன்னித்தன்மை இழப்பு என்று மக்களிடையே தவறான கருத்து உள்ளது. இப்படி கன்னித்
திரைக்கும் கன்னித்தன்மைக்கும் இடையே ஒரு முடிச்சை போட்டு வைத்துள்ளனர். ஆனால்
அந்தக் காலத்தில் பெண்கள் யாரும் கடினமான வேலை, உடற்பயிற்சி, வாகனம் ஓட்டுவது
என்று ஈடுபடவில்லை.
ஆனால்
தற்போது பெண்கள் சைக்கிள் ஓட்டுவது, ஜிம்னாஸ்டிக் செய்வது, யோனி பகுதியின் டம்பன்
பயன்படுத்துவது, சுய இன்பம் காண்பது இவற்றால் கூட பெண்களின் கன்னித் திரை
கிழியலாம். அதுமட்டுமல்லாமல் சில பெண் குழந்தைகள் பிறக்கும் போதே கன்னித்திரை
இல்லாமல் பிறக்கிறார்கள் என்பதையும் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்
மருத்துவர்கள். ஆனால் இது தெரியாமல் புரியாமல் மக்கள் பெண்களின் மீது ஒரு பெரிய
குற்றச் சாட்டை பாலியல் ரீதியாக வைப்பது தவறானது என்று மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
இந்த சவ்வு கன்னித்தன்மையை தீர்மானிக்கும் கருவியா?
ஒரு
பெண் முதல் உடலுறவில் ஈடுபட்டு உள்ளார் என்பதற்கு வெளிப்படையான அறிகுறிகள் எதுவும்
இல்லை. மேலும் கன்னித்திரை ஒரு மெல்லிய சவ்வு இது உடறுவின் போது நீட்சி அடைவதற்கு
மட்டுமே. மற்றபடி இதற்கும் பெண்களின் கன்னித்தன்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மேலும் பெண்களின் கன்னித்தன்மையை உறுதிப்படுத்தக் கூடிய மருத்துவ சோதனைகள்
எதுவுமில்லை. எனவே கன்னித்திரை கிழிசல் என்பது இயற்கையான ஒன்றாக மட்டுமே பார்க்க
வேண்டும்.
கிழிந்த கன்னித்திரையை மீண்டும் பெற முடியுமா
நாம்
என்ன தான் மருத்துவ ரீதியாக நிறைய விஷயங்களை சொன்னால் கூட மக்கள் பெண்களின்
கன்னித்திரையை பற்றி புரிந்து கொள்வதில்லை. இதனால் நிறைய பெண்கள் விபத்தாக
கன்னித்திரை கிழிசல் ஏற்பட்டால் கூட பயப்படுகின்றனர். இதனால் திருமணத்திற்கு பிறகு
முதலிரவில் சிக்கல் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. விபத்தாக உங்க
கன்னித்திரையில் ஏற்பட்ட கிழிசலை ஹைமனோபிளாஸ்டி என்ற சிகிச்சையின் மூலம் மீண்டும்
உருவாக்கம் செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். கிழிந்த தடயமே இல்லாமல் புதிய
ஹைமன் சவ்வை உருவாக்க முடியும். லேசாக அனஸ்தீசியா கொடுத்து கிழிந்த ஹைமனை மீண்டும்
ஒட்டி புதியது போல் மாற்றி விட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹைமனோபிளாஸ்டி சிகிச்சை
இந்த
கன்னித்திரை மீட்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு வந்து
விட முடியும். 3-4 நாட்கள் ஓய்வெடுக்கும் நிலை ஏற்படும். பிறகு 2 வாரங்களுக்கு
வேலைகள் எதுவும் செய்ய அனுமதிப்பதில்லை. அதே மாதிரி அறுவை சிகிச்சை செய்த 8
வாரங்களுக்கு செக்ஸ் ரீதியான உடலுறவு கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கவனத்தில் வைக்க
வேண்டியவை
கன்னித்திரை
மீட்பு குறித்து நிறைய வீட்டு வைத்தியங்களும், ஏராளமான தகவல்களும் வலம் வருகிறது.
ஆனால் இவை எல்லாம் உண்மையான பலன் தருமா என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை
என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே அறுவை சிகிச்சை ஒன்றே இதற்கு ஏற்றது. நீங்கள்
எதாவது உடற்பயிற்சி செய்யும் போது கன்னித்திரை இழப்பு ஏற்பட்டு இருந்தாலோ
பிறக்கும் போதே கன்னித்திரை இல்லாமல் பெண்கள் பிறந்து இருந்தாலோ அவர்களுக்கு இந்த
கன்னித்திரை மீட்பு அறுவை சிகிச்சை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக