Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 மார்ச், 2020

நெட் சென்டரில் ஆபாச படங்களை ஷேர் செய்து சிறைக்கு சென்ற ஆசாமிகள்..!

முதிப் பகுதியில் சிறார் ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்து கொடுத்த 2 நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு

சிறார்களின் ஆசாபாச படங்களை பார்ப்பதும் பதிவேற்றம் செய்து பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். அந்த நடவடிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறார் ஆபாச படங்களை குறித்து புகார் தெரிவிக்க காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பிரத்யேக கைபேசி எண்ணை - 9489919722 அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் பல தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது.

அதன் அடிப்படையில், கடந்த 6ம் தேதி, கமுதி பகுதியில் செல்போன் கடை வைத்திருப்பவர்கள் பாலியல் தொடர்பான ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை காசுக்காக பதிவேற்றம் செய்து கொடுப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது.

 அந்த தகவலின்படி, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கமுதி ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கம்யூட்டர் சென்டர் மற்றும் செல்போன் கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அதில், கமுதி பேருந்து நிலையம் அருகில் உள்ள, பழனியாண்டவர் cell Accessories & Browsing Center என்ற கடையில் சோதனை செய்தபோது, கடையின் உரிமையாளர்பொன்னிருள் மற்றும் கடை ஊழியர் வழிவிட்டான்கிழவன் என்பவரும் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தும் அதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50-க்கு பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் பதிவேற்றம் செய்து கொடுத்து வந்ததும் தெரிந்தது.

இதனையடுத்து,இவர்கள் மீது இது கமுதி காவல் நிலையத்தில் குற்ற.எண் 49/2020 பிரிவு 292 (2) (b) மற்றும் Information and Technology 15 P POCSO Act சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இவர்களை போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிந்தால், உடனடியாக காவல் கண்காணிப்பாளருடைய பிரத்யேக கைபேசி எண்.9489919722-ல் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக