புல்வாமா
தாக்குதலுக்கு பயன்படுத்த வெடிமருந்து தயாரிக்கும் வேதிப்பொருள்களை அமேசான்
ஆன்லைனில் ஷாப்பிங்கில் வாங்கியதாக தற்போது விசாரணயில் தெரியவந்துள்ளது.கடந்த
ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40
சிஆர்எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின்
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
புல்வாமா
குறிப்பாக
இந்த தாக்குதல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர
தாக்குதலில் ஈடுபட்டது, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அடில்
அகமது தர் என்பது பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது.
அமேசான் ஆன்லைன்
ஷாப்பிங்
பின்பு
ஸ்ரீநகரை சேர்ந்த வெய்ஸ் உல் இஸ்லாம் (19) மற்றும் புல்வாமாவை சேர்ந்த முகமது
அப்பாஸ் (32) ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ.இ கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணை
நடத்தியது தொடர்பாக என.ஐ.ஏ ஆதரிகாரி கூறுகையில் முதற்கட்ட விசாரணையில் இவர்கள்,
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் வழிகாட்டுதல் படி, வெடிபொருள்,
பேட்டரி மற்றும் பிற உபகரணங்கள் தயாரிப்பதற்கு தேவையான ரசாயனங்களை அமேசான் ஆன்லைன்
ஷாப்பிங் தளத்தில்ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர், எனக் கூறினார்.
மேலும்
ஆன்லைன் மூலம் வெடிகுண்டு தயாரிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கிய வைசுல்
இஸ்லாம், அவற்றை தீவிரவாதிகளிடம் நேரடியாக வழங்கியுள்ளான் எனத் தெரியவந்துள்ளது.
இதேபோல கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு
இளைஞனான முகமது அப்பாஸ் ற்கொலைத் தாக்குதலை நிகழ்த்திய ஆதில் அஹம்மத் தர் உள்ளிட்ட
4 தீவிரவாதிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்தவன் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த 3-ம் தேதி கைது
செய்யப்பட்ட தாரிக் அஹம்மத் ஷா மற்றும் அவரது மகள் இன்ஷா ஜன் ஆகியோரது வீட்டிற்கு
தீவிரவாதிகளை பத்திரமாக அனுப்பிய வேலையையும் ராதர் மேற்கொண்டாக என்ஐஏ அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாத அமைப்பு
இந்த புல்வாமா தற்கொலைத் தாக்குதல்
நடத்திய ஆதில் அஹம்மத் தர் கடைசியாக எடுத்த வீடியோவை, பாகிஸ்தானில் இருந்து
ஜெய்ஷ்-இ-முஹமது தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு பிறகு வெளியிட்டது. இந்த வீடியோ
தாரிக் அஹம்மத் ஷா வீட்டில் எடுக்கப்பட்டது என்ஐஏ வட்டாரங்கள் சார்பில் தகவல்
வெளிவந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக