உலகம்
முழுவதும் கொரோனா வைரஸ் (Coronavirus)
பரவுகிறது என்ற அச்சங்களுக்கு மத்தியில், ஒரு பெரிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆம், உலகெங்கிலும் உள்ள பலர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
ஒவ்வொரு நாளும் புதிதாக பலர் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். இத்தனைக்கும்
இடையில், ஒரு நாடு தொற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி விரைவில் வழங்கப்படும் என
உறுதியளிக்கிறது.
இது ஒரு உயிருள்ள தடுப்பூசி:
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி, கோவிட் -19 (COVID-19) உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், நம் நாட்டின் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸின் தரம் மற்றும் உயிரியல் தன்மையைக் கண்டறிவதில் வெற்றிகரமாக உள்ளனர். ஆனால் வைரஸின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து இன்னும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கு இன்னும் நேரம் தேவைப்படும் என்று கூறினார். மேலும், எங்கள் நிறுவனத்தில் சுமார் 50 திறமையான விஞ்ஞானிகள் ஏற்கனவே வைரஸை எதிர்த்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
தடுப்பூசியின் தரம், அதன் பக்க விளைவுகளும் ஆய்வு செய்யப்படும்:
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி (Coronavirus Vaccine) தயாரானதும், அதன் சோதனை மேற்கொள்ளப்படும். அப்பொழுது முதலில் இந்த தடுப்பூசி விலங்குகளுக்கும், அதன்பிறகு மனிதர்களுக்கும் சோதிக்கப்படும். தடுப்பூசியின் தரம் மற்றும் அதன் பக்க விளைவுகளும் ஆய்வு செய்யப்படும். இந்த செயல்முறைக்கு பல மாதங்கள் தேவைப்படலாம். இந்த தடுப்பூசி அமெரிக்க உணவு மற்றும் நிர்வாகம் (FDA) மற்றும் சீன மருந்து ஆணையத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக