நவீன் என்ற சிறுவனின் அம்மா மிகவும் அழகாக இருப்பார். அவருடைய அழகிற்கு ஏற்றார்போலவே அவருடைய பெயரும் ரதி. அவர் எப்போதுமே அவரது சமையல் அறையில் ஒரு வாய் குறுகலான ஜாடி ஒன்றில் முந்திரிப் பருப்புகளைப் போட்டு வைத்திருப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் நவீனின் அம்மா காய்கறி வாங்குவதற்காக வெளியே செல்லும் போது ஜாடியை பார்த்த நவீன், நான் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்று வருவதற்குள் உனக்கு பசி எடுத்தால் இதோ இந்த ஜாடியிலிருந்து கொஞ்சம் முந்திரிப்பருப்பை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிரு. நான் வெளியே சென்று விட்டு சீக்கிரம் வந்து விடுகிறேன் என்று சொல்லிச் சென்றார்.
நவீனும் அம்மா வெளியில் சென்றவுடன் தன்னால் ஜாடியினுள் கை விட்டு கையில் எவ்வளவு முந்திரிப் பருப்பை எடுக்க முடியுமோ அதை எடுத்துக்கொண்டு ஜாடியினுள்ளிருந்து தன் கையை வெளியே எடுக்கப் பார்த்தான். ஜாடியின் வாய் குறுகலாக இருந்ததால் அவனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை.
தன் கையில் இருக்கும் முந்திரிப்பருப்பை ஜாடியில் போட மனமில்லாத நவீன், ஜாடியில் மாட்டிக்கொண்டிருக்கும் தன்னுடைய கையை வெளியே எடுக்க முயற்சித்து முடியாமல் கடைசியில் அழ ஆரம்பித்தான்.
அவன் அழுது கொண்டிருந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த நவீனின் அம்மா வந்துவிட்டார். அவர் ஏன் அழுது கொண்டிருக்கிறாய். ஜாடியில் இருந்து கையை வெளியே எடுக்க முடியவில்லை அம்மா என்று கூறினான். உன் கையில் வைத்திருக்கும் முந்திரிப்பருப்பில் பாதியை ஜாடியில் போட்டுவிட்டால், மீதி உன் கையில் கொஞ்சம் முந்திரிப்பருப்பு தான் இருக்கும். இப்போது ஜாடியில் இருந்து உன் கை சுலபமாக வெளியே வந்துவிடும் என்றார்.
நவீனும் அவன் அம்மா சொல்படியே நடந்தான். கையும் ஜாடியில் இருந்து வெளியே வந்தது. நவீனின் கை வெளியே வந்ததும் நவீனிடம் அவனது அம்மா, எதையும் ஒரே சமயத்தில் அளவிற்கு அதிகமாகப் பெறுவதற்கு முயற்சிக்கக்கூடாது என்றும், எதையும் அளவோடுதான் உண்பதே சிறந்தது என்றும் அறிவுரை கூறினார். அன்றிலிருந்து நவீனும் எதிலும் அதிக ஆசைப்படக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டான்.
தத்துவம் :
எதையும் ஒரே சமயத்தில் அளவிற்கு அதிகமாகப் பெறுவதற்கு முயற்சிக்கக்கூடாது. எதையும் அளவோடுதான் உண்பதே சிறந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக