இன்று முதல் ஏப்ரல் 15 வரை எந்த நாட்டிற்கும் விசா கிடையாது
என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலகம்
முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி
வருகிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் நேற்று மரணமடைந்தார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த
நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு மிக
தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் ஏப்ரல் 15 வரை எந்த நாட்டிற்கும்
விசா கிடையாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது அதுமட்டுமின்றி
சீனா, இத்தாலி உள்பட ஒருசில நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் மற்றும் பயணிகள்
மற்றும் இந்தியர்கள் அனைவரும் 15 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்
என்றும் அரசு அறிவித்துள்ளது
இன்று
முதல் ஏப்ரல் 15 இன்றுவரை எந்த நாட்டிற்கும் விசா கிடையாது என்றாலும் ஐநா சபை அதிகாரிகள்,
சர்வதேச அமைப்புகள் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் விசா அளிக்கப்படும் என்று மத்திய அரசு
விளக்கம் அளித்துள்ளது. விசா விஷயத்தில் மத்திய அரசு கெடுபிடி காட்டியுள்ளது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக