Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 மார்ச், 2020

தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்.. சம்பளத்தையும் குறைக்க வேண்டாம்.. பஞ்சாப் அரசு வேண்டுகோள்!










குறைக்க வேண்டாம்


இதன் காரணமாக பஞ்சாப்பில் அத்தியாவசியமற்ற தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் மக்கள்
இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதே அங்கு ஓர்க் பிரம் ஹோம் என்பதும் அனைத்து தொழில்களிலும் நிறுவனங்களுக்கும் சாதகமான ஒன்று அல்ல. இதனால் பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். இது இப்படி எனில் பல நிறுவனங்களும் தொழில்சாலைகளும் வருமானம் இன்றி தவித்து வருகின்றன.
பணி நீக்கம் செய்து வருகின்றனர்
இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் குறைப்பு செய்து வருகின்றன. இதன் காரணமாக பல லட்சம் பேர் தங்கள் அடிப்படை வாழ்வாதரத்தினை கூட இழந்து தவித்து வருகின்றனர். அதிலும் நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், வேலையிழப்பும் நேர்ந்தால் அவர்கள் பெரும் பிரச்சனகளை காண வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாப் அரசு நாடு தழுவிய ஊரடங்கு போராட்டத்தில், அத்தியாவசியமற்ற தொழில்சாலைகள் மூடப்பட்டிருப்பதால், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இதற்கிடையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ அல்லது அவர்களின் ஊதியத்தினை குறைக்கவோ கூடாது என்றும் பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஊதியத்தினை குறைக்க வேண்டாம்
மேலும் தொற்று நோயால் பணியில் இருந்து விடுப்பு எடுக்கும் எந்தவொரு பணியாளரும் கடமையுடன் நடத்தப்பட வேண்டாம் என்று ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தொழிலாளர் துறை, அனைத்து முதலாளிகள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களின் தொழிலாளர்களின் ஊதியத்தினை குறைக்கவோ, குறிப்பாக சாதாரண அல்லது ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தினை குறைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மன அழுத்தம்
ஏனெனில் இந்த நெருக்கடி நிலையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, அவர்களை மேலும் மன அழுத்தற்திற்கு தள்ளும். இது மேலும் பிரச்சனைக்கு வழிவகுக்கும். எல்லாவற்றையும் விட தொற்றுநோயுடன் போராடுவதற்கான அவர்களின் மன உறுதியையும் தடுக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடும். ஆக அப்படி ஒரு வேளை தொழிலாளர்கள் மாநிலத்தினை விட்டு வெளியேறினால், அது தொழில் துறைக்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறக்கூடும்.
சம்பளத்தினை விடுவிக்க கோரிக்கை
ஆக பஞ்சாப் மாநிலம் தொழிலாளர்கள் சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழில் துறை விரும்புகிறது என்று அவ்வட்டாரத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று 30,000 தொழிலாளர்களின் ஊதியத்தினை காவல் துறை மூத்த அதிகாரி, தொழிலதிபர்களை சந்தித்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக