Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 மார்ச், 2020

வாட்ஸ்ஆப் செயலியின் ஸ்டேட்டஸ்-க்கு வந்தது புதிய நெருக்கடி.! காரணம் இதுதான்.!

 20வினாடி வரை வைக்க

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது. மேலும் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்று பிற நாடுகளில் தனது கோரத்தாண்டவத்தை நிகழத்தி வருகிறது.

குறிப்பாக உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் தற்போது வரை 33,976நபர்கள் உயிரழந்துள்ளனர்,இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து பல வதந்திகள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கின்றன.

இதேவேளையில் கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு,முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கையும் மலேசியாவில் அதிகரித்துள்ளது ஆறுதல் தகவல். இன்று மட்டும் 68 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதுவரை மலேசியாவில் 388 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர், இதனால் மக்களிடம் ஆன்லைன் பயன்பாடானது முன்பு விட அதிகரித்துள்ளது. இதில் கொரோனா குறித்த தவறான செய்திகள், தவறான கொரோனா புகைப்படங்கள் போன்றவற்றை சிலர் சமூக வலைதளங்களில் வாயிலாக பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வீடியோ ஸ்டேட்டஸ்

இதைத் தொடர்ந்து அனைமையில் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன நிறுவனங்களின் கூட்டமைப்பும், கேட்டுக்கொண்டது, இந்த நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களை சமாளிப்பதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை குறைத்துள்ளது. அது என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

இதற்குமுன்பு வரை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு 20வினாடி வரை வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 15வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. வாட்ஸஆப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக