Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 மார்ச், 2020

புதிய அட்வான்ஸ் சியர்ச் மூலம் வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை தேடுவது எப்படி?







வாட்ஸ் அப்பில் ஏற்கனவே இருக்கும் சியர்ச் வசதியில் ஒருசில குறிப்பிட்ட காண்டாக்ட் மற்றும் சேட்டில் உள்ள புகைப்படங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய அட்வான்ஸ் சியர்ச் மூலம் அனைத்து விதமான புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப் புகைப்படங்கள், டாக்குமெண்டுக்கள், லிங்குகள் மற்றும் ஆடியோ ஃபைல்களையும் சியர்ச் செய்ய முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் மிக எளிதில் தங்களுக்கு தேவையானதை சியர்ச் செய்து கொள்ளலாம்
லேட்டஸ் அப்டேட் உள்ளதா?
இந்த அட்வான்ஸ் சியர்ச் மூலம் எப்படி ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை சியர்ச் செய்யலாம் என்பதை தற்போது படிப்படியாக பார்ப்போம். அதற்கு முன்னர் வாட்ஸ் அப் லேட்டஸ் அப்டேட் உள்ளதா? என்பதையும் இண்டர்நெட் கனெக்சனையும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்.

2. இந்த சியர்ச் பாக்ஸில் நீங்கள் தேட வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோ குறித்த தகவலை பதிவு செய்யவும். அதன் பின்னர் உங்களுக்கு ஒரு ரிசல்ட் கிடைக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்

இந்த முறையை கையாள்வது என்பது மிகவும் எளியது என்பது மட்டுமின்றி உடனடியாக நாம் தேட வேண்டிய புகைப்படங்களை எந்தவித சிரமமும் இன்றி கண்டுபிடிக்கலாம். மேலும் புகைப்படங்கள், வீடியோ, லிங்குகள், டாக்குமெண்டுக்கள், ஆடியோ என தனித்தனியாக கேட்டகிரி வகையாகவும் நீங்கள் சியர்ச் செய்யலாம். அல்லது மொத்தமானதில் இருந்து தேட வேண்டும் என்றால் எந்த கேட்டகிரியையும் தேர்வு செய்யாமல் தேடலாம்.

ஒருவேளை நீங்கள் தேட வேண்டிய ஃபைல் பெயர் உங்களுக்கு தெரியும் என்றால் அந்த ஃபைலின் பெயரை பதிவு செய்தும் மிக எளிதில் தேடலாம். உதாரணமாக கிரிக்கெட் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை உங்கள் நண்பருக்கு ஷேர் செய்வதற்கா தேடுகிறீர்கள் என்றால் சியர்ச்சில் கிரிக்கெட் என்று டைப் செய்தாலே போதும். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களும் உங்கள் முன் தோன்றும். அதன்பின்னர் நீங்கள் அதில் தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக