Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 மார்ச், 2020

ரத்து செய்யப்பட்டது பங்குனி உத்திரம்..ஆண்டாள் திருக்கல்யாணம்!விஷேங்கள் இல்லைபழனி


கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழுவது மின்னல் வேகத்தில் பரவி தனது கோரத்தை அரங்கேற்றி வருகிறது.இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர்  அப்பாவி மக்கள்  உயிரிழந்து உள்ளனர். 

உலகமே கொரோனாவை கண்டு கடும் அச்சத்தில் உள்ளது.இந்தியாவில் இதன் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலை அளிக்கிறது.இதன் மின்னல் பரவலை தடுக்க  நாடு  முழுவதும்  ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் ஒன்றுக்கூடும் வழிபாடுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் முறைப்படி பூஜைகள் எல்லாம் நடந்து வருகிறது.பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 
பங்குனி மாதம் முருகனுக்கு சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர திருவிழா  நடைபெறுவது வழக்கம் ஆனால் இந்தாண்டுக்கான திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழனியில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக தேரோட்டம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வோடு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சம் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாஸ்தா கோவில்களில் நடைபெறுகின்ற குலதெய்வ வழிபாடும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணமும் உடன் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக