கடலூர்
மாவட்டம், ஐவக்குடியில் உள்ள மாடர்ன் பள்ளியில் மாணவிகள், ஸ்ரீ வித்யா மற்றும் புவனேஸ்வரி
ஆகியோர் 10ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளனர்.
இவர்கள்,
தங்களின் சைக்கிளுடன் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை கடந்தனர். மறுமுனையை கடப்பதற்காக
காத்திருந்தனர். பின்னர், மற்றொரு பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், இவர்கள் மீது
மோதி, நிற்காமல் சென்றது.
இதில்
சம்பவ இடத்திலே புவனேஸ்வரி உயிரிழந்துள்ளார். மேலும், இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு
போராடி வந்த மாணவி ஸ்ரீவித்யாவை பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தசம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக