நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு, நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அனுமதிக்க வேண்டும் என கூறி வருகிறது. இதனால் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபிரிய அறிவுறுத்தி வருகின்றன. இந்த வசதி இல்லை ஆனால் இதற்கு மத்தியில் இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதாவது 54% இந்திய நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை செய்ய போதிய வசதிகளை கொண்டிருக்க வில்லை என்று ஒர் அறிக்கை தெரிவித்துள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான கார்ட்னர், ஒரு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. சரியான சூழல் இல்லை அந்த ஆய்வின் படி இந்தியாவில் உள்ள 54% நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான சூழல் இல்லை. அதாவத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிய போதிய வசதிகள் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் தனது வேலையினை தொடர்ந்து வருகின்றன. சிறிய ஐடி நிறுவனங்களில் வசதி இல்லை ஆனால் அப்படியான ஒரு வசதி பெரும்பாலான சிறிய ஐடி நிறுவனங்களில் இல்லை என்றும் கார்ட்னர் தெரிவித்துள்ளது. மேலும் பழைய டெஸ்க்டாப் மடிக் கணினிகள், மோசமான பிணைய இணைப்பு மற்றும் யுபிஎஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமான நிறுவனங்களும், ஊழியர்களும் தொடர்ந்த பிணைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அவர்களின் வேலை பாதிக்கப்படலாம். இதன் மூலம் தொடர்பில் உள்ளார்கள் எனினும் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களுக்கு கூகுள் ஹேங்க அவுட்ஸ், ஸ்கைப், ஜூம், சிஸ்கோ, வெபெக்ஸ், கோடூமீட்டிங், மைசாப்ட் குழுமம், குழும சாட் என பல ஆப்சனைகளை உபயோகப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதெ தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தவிர, மற்ற சிறு குறு நிறுவனங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது. மற்ற நிறுவனங்கள் என்ன செய்ய போகின்றன ஏனெனில் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள், எப்படி வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும் என்பது பற்றிய எந்த செய்திகள் வெளியாகவில்லை. அதிலும் பிபிஓ மற்றும் கேபிஓ உள்ளிட்ட நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது. ஆக குழு கூட்டங்கள், மற்றும் தகவல் தொடர்பு என்பது இங்கு சாத்தியமில்லை. எந்தெந்த துறையில் எல்லாம் பாதிப்பு ஆக தொலைதூர வேலை இல்லததால் உற்பத்தி, கார்ப்பரேட் மற்றும் கல்வித் துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஹிஸ்துஸ்தான் டைம்ஸில் வெளியான செய்தியில் வுசோனிக் நிறுவனத்தின் வணிகத் தலைவர் முனீர் அகமது கூறியுள்ளார். சில துறைகள் வீட்டில் இருந்தும் பணி புரிய முடியாத நிலையில் அவை முடங்கும் அபாயம் நிலவி வருகின்றன. ஆக அதுபோன்ற நிறுவனங்கள் என்ன செய்ய போகின்றனவோ தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக