ஒரு ஊரில் ஒருவர் மளிகைக்கடை ஒன்றை
வைத்து நடத்தி வந்தார். ஒருநாள் அவருடைய கடையின் முன்பாக இரண்டு சிறுவர்கள்
ரோட்டில் நின்று கொண்டு சண்டை போட்டு கொண்டிருந்தனர். அதை கடையில் இருந்து
பார்த்து கொண்டிருந்த அவர், சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களையும்
அழைத்தார். அந்த சிறுவர்கள் இருவரும் அவர் முன்பு வந்து நின்றனர்.
அவர்
அந்த சிறுவர்களிடம் எதற்காக இருவரும் சண்டைப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று
கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவன், ஐயா! நாங்கள் இரண்டு பேரும் நடந்து வந்து
கொண்டிருக்கும் பொழுது எங்கள் கண்ணில் இந்த 50 ரூபாய் நோட்டு தரையில் கிடந்ததை
இருவரும் பார்த்தோம். ஆனால் இவன், நான் தான் முதலில் பார்த்தேன். அதனால் எனக்கு
தான் சொந்தம் என்கிறான். ஆனால் நான் தான் முதலில் பார்த்தேன். இதன் காரணமாகத்தான்
இருவரும் சண்டையிட்டுக் கொள்வதாகக் கூறினான். மேலும், இப்போது சொல்லுங்கள் இந்த 50
ரூபாய் நோட்டு யாருக்கு சொந்தம் என்று கேட்டான்.
விபரத்தைக்
கேட்ட பிறகு அவர், இருவரும் சிறுவர்களாக இருப்பதால் அவர்களை சுலபமாக ஏமாற்றி
அவர்கள் வைத்திருக்கும் 50 ரூபாயை அபகரிக்க மனதுக்குள் திட்டம் தீட்டிய அவர்,
இருவரிடமும் தான் சற்று முன்பு கடைக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போது,
என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. நல்ல வேலை அது உங்கள் கையில் கிடைத்தது.
ரொம்ப நல்லதா போச்சு. இருவரும் இந்த 10 ரூபாயை வைத்துக்கொண்டு அந்த 50 ரூபாயை
என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். இருவரும் சரி, இது உங்கள் பணம் இதை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கொடுத்தனர். பதிலுக்கு அவரும் 10
ரூபாய் நோட்டை எடுத்து இருவரிடமும் கொடுத்தார். இருவரும் வாங்கிக் கொண்டு
அங்கிருந்து புறப்பட்டு ஒற்றுமையாகச் சென்றனர்.
அந்த
சிறுவர்களிடம் இருந்து எப்படியோ ஏமாற்றி 50 ரூபாயை வாங்கி விட்டோம் என்ற
சந்தோஷத்துடன், எப்படியோ ஒரு வேலையும் செய்யாமல் 40 ரூபாயை லாபம் என்ற
மகிழ்ச்சியுடன் அந்த 50 ரூபாய் நோட்டை எடுத்துப் பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார்.
அவருடைய அதிர்ச்சிக்குக் காரணம் அந்த இரண்டு சிறுவர்களும் கொடுத்த 50 ரூபாய்
நோட்டில் ஒருபக்கம் வெள்ளையாக இருந்தது. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது அது
சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் விளையாட்டு ரூபாய் நோட்டு என்று. அடடா,
நம்முடையப் பணம் 10 ரூபாய் வீணாகப்போய் விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்
வேலையில், அந்த சிறுவர்கள் இருவரும் தனது தந்தையுடன் கடைக்கு வந்தனர்.
சிறுவர்களின்
அப்பா, கடைக்காரரிடம், சற்று முன்பு இவர்கள் இருவரும் கீழே கிடந்ததேன்று உங்களிடம்
50 ரூபாய் நோட்டை கொடுத்தார்களே அதை திருப்பித் தரும்படியும், அதோடு நீங்கள்
கொடுத்த 10 ரூபாயை நீங்களே வைத்துக்கொள்ளும்படியும் கூறிவிட்டு, அவர் கொடுத்த 10
ரூபாய் நோட்டை மேசை மீது வைத்தார்.
கடைக்காரருக்கு
என்ன சொல்வதென்றே புரியவில்லை. 50 ரூபாயை கொடுக்கவில்லை என்றால் ஏன் என்று
கேட்பார். சிறுவர்கள் விளையாட்டு 50 ரூபாய் நோட்டைத்தான் கொடுத்தார்கள் என்று
சொன்னால், பிறகு எதற்கு நீங்கள் 10 ரூபாயை கொடுத்தீர்கள் என்று கேட்பார். வாங்கவே
இல்லை என்று சொன்னால், என்னை விட இந்த சிறுவர்களைத்தான் இந்த உலகம் நம்பும் என்று
நினைத்துக் கொண்டே 10 ரூபாயை எடுத்துக் கொண்டு 50 ரூபாயை அச்சிறுவர்களின்
அப்பாவிடம் கொடுத்தார்.
அன்றிலிருந்து
அவர், அன்று முதல் சிறியவர்கள் ஆனாலும் சரி, பெரியவர்கள் ஆனாலும் சரி, யாரையும்
ஏமாற்றாமல் வாழ வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்தார்.
தத்துவம் :
மற்றவர்களை
ஏமாற்ற நினைக்கும் முன் நாமும் ஒருநாள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவோம் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக