ஹைலைட்ஸ்
1.
பேஸ்புக்கில் டிரஸ்ட் / நேர்மை குழுவை
(விளம்பரங்கள் மற்றும் வணிக தயாரிப்புகளுக்கு) வழிநடத்தும் ராப் லெதர்ன் இந்த
முடிவை ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.
2.
3.
இதனிடையே பேஸ்புக் தனது தளத்தில்
கொரோனா வைரஸ் தொடர்பான தேடல்களை உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களைக் கொண்ட
தானியங்கி பாப்-அப் மூலம் வரவேற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சத்தை கொண்டு மக்கள் சுரண்டுவதைத் தடுக்கும்
விதமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சனிக்கிழமை தங்கள் தளங்களில் மருத்துவ
முகமூடிகளை விற்கும் விளம்பரங்கள் மற்றும் வர்த்தக பட்டியல்களை தடை செய்துள்ளன.
பேஸ்புக்கில் டிரஸ்ட் / நேர்மை குழுவை
(விளம்பரங்கள் மற்றும் வணிக தயாரிப்புகளுக்கு) வழிநடத்தும் ராப் லெதர்ன் இந்த
முடிவை ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.
Update: We’re
banning ads and commerce listings selling medical face masks. We’re monitoring
COVID19 closely and will make necessary updates to our policies if we see
people trying to exploit this public health emergency. We’ll start rolling out
this change in the days ahead.
— Rob Leathern (@robleathern) March 7, 2020
"மருத்துவ முகமூடிகளை விற்கும்
விளம்பரங்கள் மற்றும் வர்த்தக பட்டியல்களை நாங்கள் தடைசெய்கிறோம். நாங்கள்
COVID-19 தாக்கம் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் இந்த பொது
சுகாதார அவசரநிலையைப் பயன்படுத்தி மக்கள் சுரண்டப்படுவதைக் கண்டால் எங்கள்
கொள்கைகளுக்கு தேவையான புதுப்பிப்புகளை செய்வோம்" என்று அவர் இந்த ட்விட்டர்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னேற்றத்தில் ராப் லெதர்ன்
உடன் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரியும் இணைந்துள்ளார்.
"விநியோகங்கள் குறுகியுள்ளன,
விலைகள் உயர்ந்துள்ளன, இந்த பொது சுகாதார அவசரநிலையில் மக்கள் சுரண்டப்படுவதை
நாங்கள் எதிர்க்கிறோம். அடுத்த சில நாட்களில் இதை நாங்கள் தொடங்குவோம்" என்று
மொசெரியும் ட்விட்டர் தளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே பேஸ்புக் தனது தளத்தில்
கொரோனா வைரஸ் தொடர்பான தேடல்களை உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களைக் கொண்ட
தானியங்கி பாப்-அப் மூலம் வரவேற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் விலை
நிர்ணயம் மற்றும் சுகாதார தவறான தகவல்களைத் தடுக்க அமைப்புகள் கொண்டுவரப்படும்
என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமேசான் தனது சந்தையில் இருந்து கை
சுத்திகரிப்பு மற்றும் ஃபேஸ் மாஸ்க் போன்ற தயாரிப்புகளில் "அதிக விலை
சலுகைகளை" அகற்றுவதற்காக செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் ePay N95
மற்றும் N100 பேஸ் மாஸ்க்குகள், கை சுத்திகரிப்பு மற்றும் ஆல்கஹால் துடைப்பான்கள்
ஆகியவற்றிற்கான அனைத்து பட்டியல்களையும் தடை செய்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
COVID-19 பாதிப்பு நிறைந்த பகுதிகளில்
வசிக்கும் பயனர்களிடையே பீதியைக் குறைக்கவோ அல்லது தடுக்கவோ உறுதியளிக்கும் கொரோனா
வைரஸ் தொடர்பான விளம்பரங்களை தடை செய்வதாக பேஸ்புக் கடந்த மாதம் அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக