பெண்களுக்கு மட்டும் தான் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டு அரிப்புகள்
ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். ஆண்களுக்கும் அரிப்புகள் கடுமையாக இருக்கும். இப்படி
ஆண்களுக்கு அரிப்புகளானது ஏற்பட்டால், அவர்கள் பொது இடம் என்றும் சிறிதும் பார்க்காமல்
சொறிய ஆரம்பிப்பார்கள். இதனால் பலருக்கு பொது இடங்களில் மானம் போகும். ஆனால் சிலர்
அரிப்பை தாங்கிக் கொண்டு, அரிக்க முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி, இப்படி அரிப்புகள் ஏற்பட்டால்,
பல ஆண்கள் எதற்கு ஏற்படுகின்றது என்று யோசிப்பதே இல்லை. அப்படி யோசிக்காமல் இருப்பதால்,
அங்கு ஏற்படும் அரிப்புகளானது முற்றி, அவ்விடத்தில் காயங்களையோ, பல தீவிரமான பிரச்சனையையோ
ஏற்படுத்திவிடும். மேலும் இந்த மாதிரியான இடத்தில் அரிப்புக்கள் ஏற்படும் போது, அதனை
மருத்துவரிடம் சொல்லவும் பல ஆண்கள் தயக்கம் கொள்வார்கள்.
ஆண்களே! தயவு செய்து பிறப்புறுப்பில் அரிப்புக்கள்
ஏற்பட்டால், அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு, முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
இங்கு ஆண்களின் பிறப்புறுப்பில் அரிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜாக் அரிப்பு (Jock Itch)
ஜாக் அரிப்பு என்பது ஆண்கள் உள்ளாடையை
இறுக்கமாகவோ, காற்றுப்புகாதவாறு அணிந்தாலோ, அவ்விடத்தில் உள்ள சுருக்கங்களில் வியர்வையானது
தங்கி, ஈரப்பசை அதிகரித்து, அங்கு பூஞ்சைகள் வளர்ந்து அரிப்புக்களை ஏற்படுத்தும். பொதுவாக
இந்த காரணத்தினால் பல ஆண்களுக்கு அரிப்புகள் ஏற்படுகிறது.
உடலுறவுக்கு பின் சுத்தம் இல்லாமை
உடலுறவு கொண்ட பின்னர் பிறப்புறுப்பை சுத்தமாக
கழுவ வேண்டும். இல்லாவிட்டால், அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அரிப்புகள்
ஏற்பட ஆரம்பிக்கும்.
குளியலின் போது சுத்தம் செய்யாமை
தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை
நன்கு சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டாலும், அரிப்புகள் ஏற்படக்கூடும்.
சிறுநீர் கழித்த பின்னர் கழுவாமல் இருப்பது
ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னரும்,
பிறப்புறுப்பை சுத்தம் செய்யாவிட்டாலும், அரிப்புகள் அவ்விடத்தில் அதிகம் ஏற்படும்.
எனவே ஒவ்வொரு முறையும் தவறாமல் தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.
முடியை ஷேவ் செய்யாமை
பிறப்புறுப்பை சுற்றி வளரும் முடியை முறையாக
ஷேவ் செய்து சுத்தமாக பராமரிக்காவிட்டால், அவ்விடத்தில் பேன் பெருகி, கடுமையான அரிப்புக்களை
ஏற்படுத்தும்.
நோய்த்தொற்றுகள்
சரும நோய்களான ஸ்கேபிஸ், ஈஸ்ட் தொற்று
போன்றவற்றின் காரணமாகவும் அரிப்புகள் ஏற்படலாம். எனவே இத்தகைய தொற்றுகள் இருந்தால்,
மருத்துவரை அணுகி போதிய சிகிச்சையை பெறுங்கள்.
அழுக்குகள் சேர்வது
குளிக்கும் போதும், தண்ணீர் விட்டுக் கழுவும்
போதும், ஆண் குறியின் மேல் தோலை நீக்கி நன்றாக கழுவ வேண்டும். நிறையப் பேர் இதைச் செய்வதில்லை.
இதனால் தோலுக்குக் கீழே அழுக்கு சேரும். இதுவும் கூட பாதிப்பை ஏற்படுத்தும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக