கொரோனா
வைரஸ் இப்போது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால் உலகம் முழுவதும்
பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் சுகாதார
அவசரநிலை அறிவித்திருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் உலகளாவிய ஒரு
தொற்றுநோய் என அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் சிகிசைக்காக தனி
மருத்துவக் காப்பீட்டு திட்டம் அல்லது ஏற்கனவே இருக்கும் காப்பீட்டு திட்டம்
போதுமா என்று மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதுவரை
கொரோனா வைரஸ் 1.5 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. ஏற்கனவே 4000
க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு
அதிகரித்து வருகின்றன. இதில் மோசமான விசியம் என்னவென்றால், இந்த நோய்க்கு இன்னும்
ஒரு மருந்தோ அல்லது சிகிச்சை என்பது இல்லை.
ஏற்கனவே
மருத்துவக் காப்பீட்டு திட்டம் இருந்தாலும் உங்களை சந்தேகத்தை எழுப்பும் ஒரு
கேள்வி மனதில் தோன்றாலம். யாராவது வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக்
கண்டறியப்பட்டால் என்ன நடக்கும்? அவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம்
சிகிச்சையை அளிக்கப்படுமா? என்பது தான்.
வல்லுநர்களின்
கூற்றுப்படி, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ -
Insurance Regulatory and Development Authority of India) அனைத்து காப்பீட்டு
நிறுவனங்களுக்கும் பாலிசிதாரர்களின் தற்போதைய சுகாதார காப்பீட்டு திட்டங்களில்
கொரோனா வைரஸ் சிகிச்சையை சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா
வைரஸ் குறித்து குறிப்பிட்ட மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கொள்கைகளை
வடிவமைக்குமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை சுகாதார காப்பீட்டு (IRDA) நிறுவனங்களுக்கு
அறிவுறுத்தியுள்ளது. இஜ்த இந்த வைரஸ்கான சிகிச்சையை கொள்கையில் உள்ளடக்க வேண்டும்
என்று கூறியுள்ளது.
வைரஸ்
தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்யுமாறு
நிறுவனங்களை IRDA கேட்டுள்ளது.
எந்தவொரு சுகாதார மருத்துவ காப்பீட்டுக் திட்டமும் கொரோனா வைரஸின் சிகிச்சையை உள்ளடக்கும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கும் நிறுவனங்களால் செலவுகள் பூர்த்தி செய்யப்படும். அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் அடங்கும். சில காப்பீட்டாளர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளைக் கொண்டு வந்துள்ளனர்.

"டிஜிட்டல் திட்டம்"
கொரோனா வைரஸ் சிகிச்சை பெறலாம்:
-
காப்பீட்டு நிறுவனங்கள் தொடக்க இலக்காக கொரோனா வைரஸிற்காக "டிஜிட்டல்
திட்டம்" அறிவித்துள்ளது
- திட்டத்தின் பெயர் "டிஜிட்டல் ஹெல்த்கேர் பிளஸ்" (Digit Healthcare Plus)
- இந்த பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொகை ரூ .25000 முதல் 200000 வரை
- இது ரொக்கபணம் பாலிசி. இதற்கு பிரீமியம் ரூ .299 முதல் தொடங்குகிறது
- பாலிசியின் கீழ் முழு சிகிச்சை அளிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக