உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு டார்க் தீம் மோகம்
பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். டார்க் தீம் மீதான இவர்களின் அதீத ஆர்வம் மற்றும்
விருப்பம் தற்பொழுது, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள பெரும்பாலான பயன்பாட்டுச் செயலிகளைக்
கருப்பாக மாற்றியுள்ளது. அதாவது, டார்க்காக மாற்றியுள்ளது. கூகுள் பிளே பயன்பாட்டில்
இருக்கும் டார்க் தீம் பயன்முறையை எப்படி ஆன் செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
டார்க் தீம் சேவை
வாட்ஸ்அப், மெசஞ்சர், ஜிமெயில் மற்றும்
இன்ஸ்டாகிராம் என்று பெரும்பாலான பயன்பாடுகளில் இந்த டார்க் தீம் சேவை களமிறப்பட்டுவிட்டது.
அவ்வளவு ஏன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் கூட பயனர்களுக்கு டார்க் தீம் சேவை கிடைக்கிறது.
உங்கள் ஸ்மார்ட்போன் மெனு டேப் முதல் நம்பர் பேட் வரை அனைத்தையும் டார்க் மோடு சேவையின்
கீழ் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வரிசையில் தற்பொழுது கூகிள் பிளே சேர்ந்துள்ளது.
கண்களுக்கு பாதுகாப்பு
இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்
பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த டார்க் தீம் பயன்முறை கண்களுக்கு பாதுகாப்பு தருகிறது,
உங்கள் போனின் பேட்டரி செலவைக் குறைகிறது என்று தெரிவிக்கின்றனர். கூகிள் பிளே பயன்பாட்டில்
கூட எதற்கு இந்த டார்க் மோடு தீம் சேவை என்பது தான் தெரியவில்லை.
கூகிள் பிளே சேவைக்கு டார்க் தீம் அவசியமா?
ஏனென்றால் பெரும்பாலானோர் கூகிள் பிளே
சேவையை அதிக நேரம் பயன்படுத்துவதில்லை, அதுதான் உண்மையும் கூட. அப்படி இருக்கையில்
கூகிள் பிளே சேவைக்கு டார்க் தீம் பயன்முறை அவசியமா என்ற கேள்விக்கு பதில் என்ன தெரியுமா?
பாதுகாப்பு என்பது அனைவருக்கும் அவசியம் தானே என்று நிறுவனம் கூறுகிறது.
அனைத்து சாதனத்திலும் டார்க் தீம்
தற்பொழுது, இந்த டார்க் தீம் சேவை அனைத்து
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அவர்களின் சாதனத்தில் கிடைக்கிறது. கூகிள் பிளே பயன்பாட்டில்
எப்படி டார்க் தீம் பயன்முறையை எளிதாக ஆக்டிவேட் செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அனைத்து பயன்பாட்டிலும் டார்க் தீம் பயன்முறைக்கான ஆப்ஷன் அந்தந்த பயன்பாட்டின் செட்டிங்ஸ்
பிரிவில் தான் இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Google Play டார்க் தீம் எப்படி ON செய்வது?
- கூகிள் பிளேயில் டார்க் தீம் பயன்முறையை இயக்குவது மிகவும் எளிது.
- முதலில் உங்கள் போனில் Google Play பயன்பாட்டை ஓபன் செய்யுங்கள்.
- பின் கூகிள் பிளே பயன்பாட்டில் உள்ள செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்லவும்.
- செட்டிங்ஸ் மெனு ஓபன் செய்தபின், அதில் உள்ள தீம்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- லைட் (Light), டார்க் (Dark) மற்றும் சிஸ்டெம் டீஃபால்ட் (System default) என்று மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்படி
டார்க் தீம் பயன்முறையை ON செய்யலாம்
- இயல்பாகவே உங்கள் ஸ்மார்ட்போனில் லைட் தீம் அப்ளை செய்யப்பட்டிருக்கும்.
- டார்க் தீம் பயன்முறையை ON செய்ய டார்க் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்கள் கூகிள் பிளே பயன்பாட்டில் டார்க் தீம் பயன்முறை வெற்றிகரமாக ஆன் செய்யப்பட்டுவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக