உலகின் சுமார் 100 நாடுகள் தற்போது கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக இத்தாலியில், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில்
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, இந்தியாவில் மட்டும் சுமார் 50-க்கும்
மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. மக்கள் அனைவரும் பீதியில் முகமூடியுடன்
சுற்றி வருகின்றனர்.
30 வினாடி ஆடியோ காலர் டியூன்
கொரோனா வைரஸிற்கான விழிப்புணர்வு
முயற்சிகளை அரசு மற்றும் சுகாதார நிறுவனங்கள் செய்து வருகிறது. தொலைத் தொடர்பு
நிறுவனங்களும் அவர்களின் பங்கிற்கு சும்மா இருக்கவில்லை. அவர்களின் முக்கிய பங்காக
30 வினாடி ஆடியோ காலர் டியூன் விழிப்புணர்வு தகவலை அனைவருக்கும் கட்டாய காலர்
டியூனாக செட் செய்துள்ளது. இதை வைத்து நெட்டிசன்ஸ்கள் கலாய்த்து வருகின்றனர்.
கட்டாய காலர் டியூன்
கொரோனா வைரஸ்கள் குறித்த
விழிப்புணர்வு தொடர்பாக ஒரு 30 விநாடி ஆடியோ கிளிப்பை கட்டாய காலர் டியூனாக
அனைவருக்கும் கேட்கும் படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செட் செய்துவிட்டது. இந்த 30
வினாடி விழிப்புணர்வு கிளிப் பிளே செய்து முடிந்த பின் தான் உங்களின் அணைப்பு
இணைக்கப்படும். அதுவரை நீங்கள் இந்த விழிப்புணர்வு தகவலைக் கேட்க வேண்டியது கட்டாயமாக
இருக்கும்.
கட்டாயம் இதை மீண்டும் மீண்டும்
கேட்டாக வேண்டுமா?
இதை மீண்டும் மீண்டும்
கேட்பவர்களுக்குச் சற்று கடுப்பாகத் தான் இருக்கும், இதை எப்படி ஆஃப் செய்வது
என்று தெரியாமல் அனைவரும் 30 வினாடிகள் கேட்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்.
இந்த 30 வினாடி விழிப்புணர்வு தகவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த இப்போதைக்கு வழி
இல்லை என்பதே உண்மை. ஆனால், தற்காலிகமாக இதை நீங்கள் ஸ்கிப் செய்யலாம்.
ஸ்கிப் செய்துகொள்ள ஒரு ஈஸி வழி
ஏர்டெல், வோடபோன்-ஐடியா, ஜியோ மற்றும்
பிற நெட்வொர்க்கில் இருந்து அழைக்கும் போது, உங்கள் மொபைலில் வரும் கொரோனா வைரஸ்
எச்சரிக்கை செய்தியை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்க்கலாம். இந்த செயல்முறையைப்
பின்பற்றி உங்கள் அழைப்பிற்கு முன்னாள் வரும் 30 வினாடி கட்டாய விழிப்புணர்வு
தகவலை உங்களால் ஸ்கிப் செய்துகொள்ள முடியும். செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதை செய்யுங்கள் போதும்
- உங்கள் அழைப்பிற்கான எண்களை அழுத்துங்கள்.
- ஆடியோ காலர் டியூன் விழிப்புணர்வு தகவல் பிளே செய்யக் காத்திருங்கள்.
- ஆடியோ காலர் டியூன் தகவல் பிளே ஆனவுடன் எண் 1-ஐ அழுத்துங்கள் அல்லது # அழுத்துங்கள்.
- உடனடியாக 30 வினாடி ஆடியோ காலர் டியூன் நிறுத்தப்பட்டு அழைப்பிற்கு நேரடியாகச் சென்றுவிடும்.
- சில எண்களிற்கு இந்த முறை செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியின் மூலம்
விழிப்புணர்வு தகவலைக் கேட்டவர்கள், மீண்டும் கேட்க விரும்பாதவர்கள் அல்லது அவசர
நேரத்தில் உடனடியாக அழைப்பை மேற்கொள்ள விரும்பும் பயனர்களுக்கு உதவுதற்கு மட்டுமே.
எங்கள் நோக்கம் கொரோனா வைரஸ்கள் பற்றிய அரசாங்கத்தின் விழிப்புணர்வு முயற்சியைத்
தடுப்பதல்ல, ஆனால் அதே செய்தியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கலக்கமடைந்தவர்களுக்கு
இது ஒரு செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக