Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 மார்ச், 2020

விவோ S6 எப்போது அறிமுகம் ஆகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?



5G ஆதரவு கொண்ட விவோ S6 ஸ்மார்ட்போன் ஆனது இந்த மார்ச் மாத இறுதிக்குள் அறிமுகம் ஆகவுள்ளது.


விவோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான எஸ் தொடரின் கீழ் அடுத்ததாக வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன் விவோ எஸ்6 தான் என்பதில் எந்த சந்தேகமும், குழப்பமும் வேண்டாம். இங்கே எழும் ஒரே ஒரு கேள்வி என்னவென்றால், விவோ எஸ்6 எப்போது அறிமுகம் ஆகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது மட்டுமே. தற்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற ஒரு அறிக்கையின்படி, வரவிருக்கும் விவோ எஸ்6 ஆனது மார்ச் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும். சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவின் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, விவோ எஸ்6 மார்ச் மாத இறுதியில் அறிமுகமாகும் மற்றும் அது 5ஜி ஆதரவு கொண்ட போனாக இருக்கும்.

 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் மற்ற 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒப்போ பைண்ட் எக்ஸ் 2, ஒப்போ பைண்ட் எக்ஸ் 2 ப்ரோ, ஹூவாய் பி 40, ஹூவாய் பி 40 ப்ரோ மற்றும் ரெட்மி கே 30 ப்ரோ ஆகியவைகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், விவோ எஸ்6 அறிமுகத்தை விவோ நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகையால் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து தற்போது தெரியவில்லை. இது 5G ஆதரவு கொண்டு வரும் என்று வதந்தி பரப்பப்படுவதால், விவோ எஸ்6 ஆனது அதன் முன்னோடிகளை விட மேம்படுத்தப்பட்ட ப்ராசஸர் உடன் வரும் என்று நம்பலாம்.

 நினைவூட்டும் வண்ணம், விவோ எஸ்5 ஆனது 6.44 இன்ச் முழு எச்டி+ அமோலேட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், இந்த டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ரீடர், 2.3GHz ஸ்னாப்டிராகன் 712 ஆக்டா கோர் ப்ராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 9 பை, 4,010 எம்ஏஎச் பேட்டரி, 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, இது 48 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் என்கிற க்வாட் கேமரா அமைப்பையும், முன்பக்கத்தில் ஒரு 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக