இந்திய
சந்தையில் வு டெலிவிஷன்ஸ் (Vu Televisions) ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல
வரவேற்ப்பு உள்ளது, காரணம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் இந்த
ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என்பதால் அதிக வரவேற்பை பெருகிறது.
43-இன்ச், 50-இன்ச்,
55-இன்ச்
இந்நிலையில்
வு டெலிவிஷன்ஸ் தனது வு பிரீமியம் 4கே தொடரின் கீழ் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச்
என மூன்று அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த
சாதனங்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட்
வலைதளம்
மேலும் வு டெலிவிஷன்ஸ் அறிமுகம்
செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் பிளிப்கார்ட் வலைதளம் வழியே
விற்பனைக்கு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின்
பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
3840x2160 பிக்சல்கள்
வெளிவந்த வு 4கே ஸ்மார்ட் டிவிகள் 4கே
எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன, மேலும் 3840x2160 பிக்சல்கள் திரை
தெளிவுத்திறன் கொண்டது. எனவே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. பின்பு சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
400nits என்ற பிரைட்நஸ்
இந்த வு ஸ்மார்ட் டிவிகள் டால்ப விஷன்
தரநிலை உட்படி எச்.டி.ஆரை ஆதரிக்கின்றன, மேலும் 400nits என்ற பிரைட்நஸ்
மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்
வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ,
ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற அனைத்து முக்கிய பயன்பாடுகள் மற்றும்
ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான ஆதரவோடு இந்த வு பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்கள்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
30வாட் சவுண்ட் அவுட்புட்
வு பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்கள்
ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளன, எனவே இயக்கத்திற்கு மிகவும்
அருமையாக இருக்கும். மேலும் 30வாட் சவுண்ட் அவுட்புட் ஆதரவைக் கொண்டு
வெளிவந்துள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
பாரம்பரிய ரிமோட்
பாரம்பரிய ரிமோட்டுகளை விட சிறிய
பொத்தான்கள் கொண்ட, நேர்த்தியான ரிமோட்டையும் கொண்டுள்ளது வு பிரீமியம் ஸ்மார்ட்
டிவிகள், இந்த ரிமோட்டில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும்
ஹாட்ஸ்டார்,கூகுள் அசிஸ்டென்ட் பொத்தான்கள் மற்றும் வழிசெலுத்தலுக்கான டி-பேடும்
உள்ளன.
உள்ளமைக்கப்பட்ட Chromecast
பிற ஆண்ட்ராய்டு டிவி சாதனங்களைப்
போலவே, வு பிரீமியம் 4 கே டிவி வரம்பும் கூகுள் காஸ்ட் ஆதரவுக்காக உள்ளமைக்கப்பட்ட
Chromecast ஐக் கொண்டுள்ளது. மேலும் இந்த வு ஸ்மார்ட் டிவிகளில் டால்பி ஆடியோ
ட்யூனிங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டகாசமான விலை
43-இன்ச் வு பிரீமியம் 4 கே டிவி
ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
50-இன்ச் வு பிரீமியம் 4 கே டிவி
ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.
55-இன்ச் வு பிரீமியம் 4 கே டிவி
ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.31,999-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக