Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஏப்ரல், 2020

முதற்கட்டமாக சென்னையில் 100 வாகனங்கள் மூலம் காய்கறிகள் டோர்டெலிவரி.!

கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிரமாக பின்பற்றப்பட்டு, வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில், தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. 

இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூடுவதை தவிர்க்க, கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு, வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர்டெலிவரி செய்யும் முறையை இன்று முதல் செயல்படுத்தியுள்ளது. 

இதற்காக தற்போது முதற்கட்டமாக 100 டாடா ஏஸ் வாகனத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் காய்கறிகளை கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே டோர் டெலிவரி செய்யவுள்ளது. இதற்காக தொலைபேசி எண்ணையும், இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முன்பதிவு செய்து காய்கறிகளை சென்னை மக்கள் வீட்டிலிருந்தபடியே வாங்கிக்கொள்ளலாம். 

இந்த முயற்சி வெற்றியடைந்தால், இன்னும் பல வாகனங்கள் மூலம் டோர்டெலிவரி செய்ய கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு முடிவெடுத்துள்ளது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக