மதுரை சிந்தாமணி சாலை கண்ணன் காலனியை சேர்ந்தவர் இளம்வயது ராமமூர்த்தி. இவருக்கு அண்மையில் தான் திருமணமானது, இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிந்தாமணி சாலை அருகில் உள்ள ராஜம்மன் நகரில் வசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ராமமூர்த்தியின் பக்கத்து வீட்டில் உள்ள மைனர் பெண்ணுக்கு விஜயகுமார் என்று இளைஞருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்துள்ளது.
இதுகுறித்து ராமமூர்த்தி குழந்தை திருமணம் என்ற பெயரில் போலீசாருக்கு தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் விஜயகுமாரின் குடும்பம் ராமமூர்த்தி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ராமமூர்த்தி அவரது பெற்றோரைப் பார்க்க ராஜம்மன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரது தந்தை நல்லுசாமி இருசக்கர வாகனத்தில் ராமமூர்த்தியை அவரது வீட்டில் விட சென்றுள்ளார். இந்நேரம் பார்த்து விஜயகுமாரும் அவரது உறவினர்களும் நல்லு சாமியின் வாகனத்தை வழிமறித்து உள்ளனர்.
இதை பார்த்த ராமமூர்த்தி அங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார் இருப்பினும் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தந்தை நல்லுசாமி ராமமூர்த்தியை காப்பாற்ற முயன்றார், ஆனால் படுகாயமடைந்து ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக