ஏப்ரல் 14 க்குப் பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால், அது அரியானா மாநிலத்தில் கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். "ஊரடங்கு தொடர்பான மத்திய அரசின் கட்டளைகளை நாங்கள் பின்பற்றுவோம். கொரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருமா அல்லது தொடர்மா என்பது குறித்து இப்போது எதையும் கூற முடியாது" என்று அவர் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.-யிடம் தெரிவித்தார்.
ஹரியானாவில் செவ்வாய்க்கிழமை 33 கோவிட் -19 நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஹரியானா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் மாநிலத்தில் மொத்த கொரோனா வைரஸ் நேர்மறை வழக்குகள் 129 ஆக உள்ளன. இதில் இரண்டு இறப்புகள் மற்றும் 17 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
அரியானா மாநிலத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கையில் 79 ஜமாஅத் உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் மார்ச் மாதம் டெல்லியின் நிஜாமுதீன் மார்க்கஸில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்று திரும்பியவர்கள்.
உறுதிப்படுத்தப்பட்ட 129 வழக்குகளில் 6 பேர் இலங்கை மற்றும் நேபாளம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவை என மாநில மருத்துவ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களைச் சேர்ந்த நாற்பத்தைந்து நோயாளிகள் உள்ளனர். அதில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 11 பேர், ஏழு பீகார், ஆறு தமிழ்நாடு, ஐந்து கேரளா, நான்கு மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த தலா மூன்று பேர், இரண்டு பேர் தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகா, சென்னை மற்றும் அசாம் பகுதியை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் எனக் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஹரியானா செவ்வாய்க்கிழமை காலையில் தெரிவித்தது. அவர்களில் 22 பேர் தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் ஒருவர் சுகாதார பணியாளர் என்று மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக