பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1803ம் ஆண்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. அங்கியிருக்கும் டெக்கன் - கெகான்கள் பகுதிகளை இணைக்கும் விதத்தில் இந்த மேம்பாலத்தை ஆங்கிலேயர்கள் கட்டினர்.
எவ்வித இயந்திர பயன்பாடுகள் இல்லாமல், வெறும் மனித சக்தியால் மட்டுமே இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போதே இந்த மேம்பாலம் நீண்ட ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என கட்டுமானப் பொறியாளர்கள் உறுதி அளித்தனர். அதற்கு ஏற்றவாறு மேம்பாலத்தின் கீழ் ஒரு கல்வெட்டையும் அவர்கள் பொறித்தனர்.
இந்த மேம்பாலத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வெறும் 11 மாதங்களுக்குள் கட்டி முடித்தனர். மேம்பாலம் பணிகள் நடக்கும் பகுதிகளில் வசித்து வந்த பலநூறு கணக்கான மக்கள், இதற்கான கட்டுமான தொழிலில் ஈடுபட்டதாக கல்வெட்டு தகவல் கூறுகிறது.
அமுர்தாஞ்ஜன் மேம்பாலத்தை கட்டியவர் சர் ஜான் மல்கோம் ஜி.சி.இ அன்னோ டோம்னி என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பெருவாகனங்கள், கார்கள் போன்றவை செல்லும் விதத்தில் இந்த மேம்பாலத்தை அவர் கட்டியுள்ளார்.
சுமார் 190 ஆண்டுகாலமாக அப்பகுதியில் அடையாளமாக திகழ்ந்து வந்த மேம்பாலம் தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் சாலை மேம்பாட்டு கழகத்தினரால் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. அமுர்தாஞ்ஜன் மேம்பாலம் அமைந்துள்ள இடத்தில் தான் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலை அமைந்துள்ளது. அதற்கான விரிவாக்க பணிகளுக்கான இந்த மேம்பாலம் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமுர்தாஞ்ஜன் பாலத்தை பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தவில்லை. அந்த மேம்பாலம் இடிந்துவிழும் தன்மையோடு இருந்ததாகவும், இதனால் அதில் யாரும் செல்ல வில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மேம்பாலத்திற்கு அடியில் போகும் சாலையில் வாகனங்கள் சென்று வந்து கொண்டிருந்துள்ளன.
தவிர, பெருவாகனங்களின் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. அதனால் பெரிய பெரிய தூண்களை அமைத்து ஆங்கிலேயர்கள் இதனை கட்டியுள்ளனர். தற்போதைய காலத்தில் வாகனத்தின் பெருக்கம் காரணமாக சாலையில் சென்று வருபவர்களுக்கு இந்த மேம்பாலத்தின் தூண்டுகள் பெரும் இடையூறாக இருந்துள்ளன.
மேலும், மும்பை-புனே அதிவேக சாலையை பயன்படுத்துபவர்களுக்கும் இந்த தூண்கள் இடைஞ்சலை தந்துள்ளது. இதன்காரணமாக அதிகாரிகள் அமுர்தாஞ்ஜன் மேம்பாலத்தை இடிக்க முடிவு செய்ததாக தகவல்கள் கூறுகினறன.
மிகவும் பரபரப்பாக வாகனங்கள் செல்லும் சாலையாக உள்ளது மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், அத்தியாவச தேவைகளுக்கான வாகனங்கள் தற்போதும் இந்த சாலையில் சென்று கொண்டு தான் உள்ளன.
அந்த வாகனங்கள் செல்வதற்கு இப்பாலத்தின் தூண்கள் இடையூறு செய்து வருகின்றன. இதன் காரணமாகவும் மாநில அரசு அமுர்தாஞ்ஜன் மேம்பாலத்தை இடித்து தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாகன போக்குவரத்து குறைவான நேரத்தில் இருக்கும் போது தான் இந்த மேம்பாலம் இடிக்கப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய நேரத்தில் இந்த மேம்பாலம் இடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது மாநில அரசு. மேம்பாலம் இடிக்கப்பட்டு சில மணிநேரங்களில் அனைத்து பணிகளும் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.
தற்போது ஊரடங்கு பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இந்த மேம்பாலத்தை இடிக்கும் பணி எவ்வித சிரமுமின்றி நடந்துள்ளது. மீண்டும் இந்த வழித்தடத்திலுள்ள சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் மஹாராஷ்டிரா அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.
அதன்படி, விரைந்து சாலை பணிகளை முடிக்கும் விதமாக மேம்பாலம் அமைந்துள்ள ராய்காட் மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் உத்தர்வுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி மஹாராஷ்டிரா சாலை மேம்பாட்டு பணிகள் துறை திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக