Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

5 மாதத்தில் உடல் எடையை 35 கிலோ குறைத்த பிரபல காமெடி நடிகர் மரணம்


samayam tamil
5 மாதத்தில் தன் உடல் எடையை 35 கிலோ குறைத்த காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ் கல்லீரல் பிரச்சனையால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 44.
புல்லட் பிரகாஷ்

கன்னட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் புல்லட் பிரகாஷ். அவர் புல்லட் ஓட்டியதால் புல்லட் பிரகாஷ் என்று அழைக்கப்பட்டார். சுமார் 325 படங்களில் நடித்திருக்கிறார். குண்டாக இருந்த அவர் 5 மாதங்களில் தனது எடையை 35 கிலோ குறைத்தார். ஒல்லிக்குச்சியான பிறகு அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மரணம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புல்லட் பிரகாஷுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. சிகிச்சை அளித்தாலும் அவரின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. அவரை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அவர் குடும்பத்தாருக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார். அவருக்கு வயது 44. அவருக்கு மனைவி இருக்கிறார்.

அதிர்ச்சி

புல்லட் பிரகாஷ் உயிரிழந்த செய்தி அறிந்த கன்னட திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மரண செய்தி அறிந்ததும் நடிகர் துனியா விஜய் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். பல பிரபலங்கள் பிரகாஷின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். புல்லட் இறந்த செய்தியை நம்பவே முடியவில்லை, பேரதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள் நடிகர்கள், நடிகைகள்.

படங்கள்

உடல் எடையை குறைத்த கையோடு புல்லட் பிரகாஷின் உடலில் பிரச்சனை ஏற்படத் துவங்கியது. இதனால் அவர் கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையாம். அவர் புதிதாக இரண்டு படங்களில் நடிக்க அண்மையில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் பிரகாஷ். அவர் கடந்த 2015ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக