Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 18 ஏப்ரல், 2020

ஊரடங்கை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது.!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு ரூ.1.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. அதுபோன்று தேவையில்லாமல் வெளியே சுற்றியதால் 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை விதிகளை மீறியதாக 2,14,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!