ஏப். 28ம் தேதிக்குள் உஜ்வாலா திட்ட பயனாளிகள் இலவச கேஸ் சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என ஐஓசி தகவல்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அரசு மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் ஏப்ரல் மாத சிலிண்டருக்கான சில்லறை விற்பனை விலைக்குரிய தொகை, 16.7 லட்சம் இந்தியன் ஆயில் உஜ்வலா திட்டப் பயனாளிகளில் 96% மேற்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த மொத்த அளவில், சுமார் 8 லட்சத்திற்கும் மேலான பயனாளிகள் சிலிண்டர்கள் பதிவு செய்து உள்ளனர். இது வரை முதல் இலவச சிலிண்டர் வசதியைப் பெற்றுக் கொள்ளாத உஜ்வலா பயனாளிகள், ஏப்ரல் மாதம் 28ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளப்படுகிறது.
அப்படி பதிவு செய்து கொண்டால் ஏப்ரல் மாதம் முடிவில் அவர்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். அவர்கள் அவ்வாறு பெற்றுக் கொண்ட பிறகு தான், இந்தியன் ஆயில் நிறுவனம், மே மாதத்திற்கான இரண்டாவது சிலிண்டர் தொகையை மே முதல் வாரத்தில் டெபாசிட் செய்ய இயலும். இருப்பினும், உஜ்வலா வாடிக்கையாளர்கள், முதல் இலவச சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு மட்டுமே இரண்டாவது சிலிண்டருக்காக புக் செய்து கொள்ள முடியும் என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக