சமீபத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி கொடுக்கலாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பலர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தங்களால் இயன்ற நிதியை கொடுத்து வருகிறார்கள்.இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்த கல்வி உதவித்தொகையை தடுப்பு நடவடிக்கைக்கு கொடுத்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-வகுப்பு பயின்று வரும் மாணவர் கிஷோர் கடந்த நான்கு ஆண்டுகளாக தான் சேமித்து வைத்த கல்வி உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தை முதல்வரின் தடுப்பு நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக