ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம், அருமையான சிப்செட் வசதி என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.தற்சமயம் சீனாவில் மட்டுமே இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.
இந்த ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800 5ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸமார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ஏ92எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்பறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ92எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள்ள அடக்கம். எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது.
5 ஜி (எஸ்ஏ / என்எஸ்ஏ)/ இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் /க்ளோனாஸ் / பீடோஇ யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.27,030-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக