Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 ஏப்ரல், 2020

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்த நிலையில்,தற்சமயம் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விறபனைப் பற்றிய தகவல் வெளிவரவில்லை.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080×2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 890 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,

மேலும் மாலி-ஜி76 எம்பி5 ஜிபியு வசதியை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக

மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுதப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்டீபோனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4500எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்டபோன் மாடல்.

5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் க்ளோனாஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல்கள் இல்லை, தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!