Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

மருத்துவமனை தேடி சுமார் 7 KM நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணி..

பெங்களூரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் நகரத்தில் ஒரு மருத்துவமனையைத் தேடி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற விஷயம் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெங்களூரில் வசிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண், தனது பிரசவத்திற்காக மருத்துவமனையைத் தேடி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். எனினும் மருத்துவமனைகள் கிடைக்காத நிலையில் இறுதியாக ஒரு பல் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்துள்ளார். ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் தனது கணவருடன் வித்யாரண்யபுரா பிரதான சாலையில் அமைந்துள்ள தனது கிளினிக்கிற்கு கர்ப்பிணிப் பெண் வந்ததாக பிரசவம் பார்த்த பல் மருத்துவர் தெரிவிக்கின்றார்.

தகவல்கள் படி கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, அந்தப் பெண்ணும் அவரது கணவரும் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து டாக்டர் ரம்யாவின் கிளினிக்கை அடைந்தனர். நடைப்பயணத்தில் இருந்து சோர்ந்துபோன அந்தப் பெண், பல் மருத்துவ மனைக்கு வந்த 5-10 நிமிடங்களுக்குள் குழந்தையை பிரசவித்தார். குழந்தையை பிரசவித்த பிறகு, அந்த பெண் சுயநினைவை இழந்தார். 

அந்தப் பெண்ணின் கணவர் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து சுமார் 20 நிமிடங்கள் துணியால் போர்த்தி வைத்துள்ளார். இதற்கிடையில், டாக்டர் ரம்யாவின் உதவியாளர் அந்த பெண்ணின் நிலை குறித்து அவருக்கு தகவல் கொடுத்தார், தொடர்ந்து ரம்யா தனது கிளினிக்கிற்கு விரைந்துள்ளார்.

தகவல் கிடைத்த உடனேயே, டாக்டர் ரம்யா மற்றும் அவரது கணவர் டாக்டர் ஹிமானிஷ் ஆகியோர் கிளினிக்கை அடைந்தனர். இரண்டு மருத்துவர்களும் குழந்தை உயிருடன் இருப்பதைக் கவனித்து சிகிச்சையைத் தொடங்கினர். இரண்டு மருத்துவர்களின் முயற்சியால் குழந்தை மற்றும் தாயின் உடல்நிலையை மீட்டெடுக்க முடிந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் மல்லேஸ்வரத்தில் உள்ள KC பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து டாக்டர் ரம்யா தெரிவிக்கையில்., "தாயும் குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக