Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஏப்ரல், 2020

ஆர்வக்கோளாறில் வீட்டையே கொளுத்திய பொதுமக்கள்: 9 மணி அதிர்ச்சி தகவல்

ஆர்வக்கோளாறில் வீட்டையே கொளுத்திய பொதுமக்கள்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை 9 நிமிடங்களுக்கு ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானோர் பிரதமரின் கோரிக்கையை ஏற்று நேற்றிரவு இந்தியா முழுவதும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் டார்ச் லைட்டுகள் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் செய்த சில விஷயங்களால் ஒரு சில விபரீதங்களும் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற பகுதியில் மொட்டை மாடியில் இருந்து கொண்டு சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் அந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது
 
அதேபோல் இன்னும் சிலர் தீப்பந்தங்களை கையிலேந்தி தெருவில் கூட்டம் கூட்டமாக சமூகவிலகலை கூட கடைபிடிக்காமல் சென்றதும் 9 மணி விளக்கேற்று சம்பவங்களில் விரும்பத்தகாத ஒன்றாக இருந்தது. இருப்பினும் இந்த ஒரு சில சம்பவங்கள் தவிர நாடு முழுவதும் நேற்று விளக்கு ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக