Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

முழு அடைப்பிலும் பறக்கும் வாகனங்கள்; அதிரடி திட்டத்துடன் செக் வைத்த காவல்துறை...

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சாலையில் தனியார் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய வழியை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்கள் மேற்கொண்டுள்ளன.

அந்த வகையில்,. கொரானா முழு அடைப்பின் போது தனியார் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த வண்ணங்கள் தீட்டும் முறை பின்பற்றப்படுகிறது. இதன்படி வெவ்வேறு வண்ணங்களில் வாகனங்களில் தீட்டப்படும் கிறுக்கல்கள், ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை அந்த வாகனங்களை வெளியே வர அனுமதிப்பதில்லை.

கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு தழுவிய முழு அடைப்பு நடைமுறையில் உள்ளது, இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பிரிவு 144-ன் கீழ் தடை அமுல் படுத்தப்பட்டுள்ளது, எனினும் தமிழகத்தில் வாகன நடமாட்டம் தொடர்ந்த கட்டுப்பாடு அற்று தான் இயங்குகிறது. 

கொரோனா முழு அடைப்பு காலத்தில் மளிகை கடைகளுக்கான நேரம் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என குறைக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரும்பாலும் நெரிசலான சந்தைகளுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் நெரிசலான வாகன வருகை தரும் நபர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் வாகனங்களுக்கு வண்ணம் தீட்டும் முயற்சி கையாளப்பட்டு வருகிறது.

இதன் வண்ணங்கள் தீட்டப்படும் முயற்சி காரணமாக, ஒரு குறிப்பிட்ட வண்ணம் தீட்டப்பட்ட வாகன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நடைமுறையை செயல்படுத்தி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிர்வாகம் இந்த செயல்முறையினை விளக்கும் விதமாக வியாழன் அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணகிரியின் ஹோசூரில் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓசூர் வரம்பில் உள்ள அனைத்து தனியார் வாகனங்களும் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் / அத்தியாவசிய நோக்கங்களுக்கா வெளியே வர அனுமதிக்கப்படும்.” அறிவிப்பின்படி, மஞ்சள் பட்டையுடன் வரையப்பட்ட வாகனங்கள் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் இயக்க அனுமதிக்கப்படும்; சிவப்பு பட்டை கொண்ட வாகனங்கள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் இயக்க அனுமதிக்கப்படும். பச்சை வண்ணப்பூச்சு பட்டைகள் பூசப்பட்ட வாகனங்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்க அனுமதிக்கப்படும்.

இந்த விதிமுறைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பொறுந்தும், நேரம் கடந்து வருவோர் அனுமதிக்கபடமாட்டர். அதேவேளையில் மருத்துவ அவசரநிலைகள் மற்றும் பலவற்றைத் தவிர வேறு எந்த வாகனங்களும் வெள்ளிக்கிழமைகளில் இயக்க அனுமதிக்கப்படாது. எங்கள் தன்னார்வலர்களும் காவல்துறையினரும் நகர சந்தையில் நின்று வாகனங்களுக்கு வண்ணப் பட்டைகள் வரைவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகள் ஏப்ரல் 11, சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். விதிகளை மீறுபவர்கள் தங்கள் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்வதற்கும் அபராதம் செலுத்துவதற்கும் பொறுப்பாவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் நகர காவல்துறையினரும் நகரத்தில் தேவையற்ற நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பொருட்டு இதேபோன்ற முறையை நகர எல்லைக்குள் சில நாட்களுக்கு முன்பு நடைமுறைப் படுத்தியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக