Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஏப்ரல், 2020

ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஜாக் காலமானார்...

ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று  கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட   நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் காலமானார். நியூசிலாந்து  அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் அவர்களின் தற்போது வயது 64. 

அவர்,  நியூசிலாந்து  அணிக்காக 1976-81 ஆண்டுகளில் களம் கண்டு விளையாடி இருக்கிறார். இவர்,  சர்வதேச அளவில்  மொத்தம் 8  டெஸ்ட் போட்டிகளிலும் , 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இவர், சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் அதிகபட்சமாக 55 ரன், முதல் தர  போட்டிகளில்  அதிகபட்சமாக 177 ரன் வரை குவித்துள்ளார்.  முதல்தர மற்றும் லிஸ்ட்  ஏ போட்டிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ரன் எடுத்துள்ளார். 

விக்கெட்  கீப்பராக இருந்தாலும் இவர் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில்  ஒரு ஓவர் மட்டும் பந்து வீசி ஒரு  விக்கெட்டையும் மட்டும் கைப்பற்றி உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், 
இந்நிலையில்,  இவர் திங்கட்கிழமை இரவு காலமானார். 

இவரது மறைவுக்கு உலக  கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும்  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக