Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 11 ஏப்ரல், 2020

குறுக்குசந்து உட்பட அனைத்தையும் மூடியது புதுச்சேரி! - தீவிர கண்காணிப்பு!

புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி நிகழ்ந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது புதுச்சேரி அரசு.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக – புதுச்சேரி இடையேயான முக்கிய போக்குவரத்து சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு முதலாவதாக பலியாகியுள்ளார்.

அதை தொடர்ந்து புதுச்சேரி அரசு பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக தமிழக – புதுச்சேரி எல்லைகள் இடையே உள்ள ஒற்றையடி பாதை, கப்பி சாலை, குறுக்கு சந்து உள்ளிட்ட 26 சிறுவழிப்பாதைகளையும் மூடி காவல் ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி அரசு. தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழையாமல் இருக்க நான்கு பக்கங்களிலும் பலத்த காவல் கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!