கொரோனா வைரஸ் பாதிப்பினை தொடர்ந்து ஆந்திர மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு இரண்டாவது மாதம் சம்பள பிடிப்பை அறிவித்துள்ளது.
காவல்துறையினர், மருத்துவ மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு அவர்களின் முழு சம்பளமும் வழங்கப்படும் எனவும், அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் 60 சதவீதம் மட்டுமே கிடைக்கும், மற்றவர்களுக்கு அரை சம்பளம் கிடைக்கும் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களின் ஏப்ரல் மாத ஓய்வூதியம் முழுமையாக வழங்கப்படும், ஆனால் பல்வேறு பதவிகளில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த இரண்டாம் மாத சம்பள பிடிப்பை ஏற்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும், காவல்துறை, மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அவர்களின் முழு சம்பளமும் வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "ஒத்திவைக்கப்பட்ட ஊதியத்தின்" கீழ், அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் 60 சதவீதம் மட்டுமே கிடைக்கும், மற்றவர்கள் மார்ச் மாதத்தைப் போல 50 சதவீதம் வரை ஊதிய பிடிப்பை காண்பார்கள். அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை தரவரிசை பதவிகளை வகிப்பவர்கள் தங்கள் ஊதியத்தில் 75 சதவிகிதம் பிடிப்பை காண்பார்கள். இது வரும் தேதியில் சரிசெய்யப்படும்" என்று அரசாங்கம் உறுதியளித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக பொது நலன் தொடர்பான வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. "நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் மாநிலத்தின் வருமானம் முழுவதுமாக கரைந்துள்ளது. வருமானம் வெறும் ரூ.100 கோடியை மட்டுமே எட்டியுள்ளது. மாநிலப் பொக்கிஷங்கள் முற்றிலும் வறண்டு போயுள்ளன. மத்திய மானியங்களும் கடன்களும் பிற திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, எனவே மாநிலத்தில் இந்த ஊதிய பிடிப்புகள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன" என்றும் அரசு அறிவிப்பு குறிப்பிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக