>>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 22 ஏப்ரல், 2020

    பம்பர விளையாட்டு

    ஞாபகம் வருதே...!

    🌀இன்றைய நாகரீக உலகத்தில் நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர மறந்த விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். நம்முடைய குழந்தை பருவத்தில் பம்பர விளையாட்டை விளையாடாதவர்களே இருக்க மாட்டார்கள். எனவே, இன்று நாம் அந்த விளையாட்டை எவ்வாறு விளையாடலாம்? என்பதை பற்றி காண்போம்.



    பம்பர விளையாட்டு :



    🌀பம்பரத்தை வைத்து பலவிதமாக விளையாடப்படுகிறது. அதில் நாம் இன்று ஒரு வகை சுவாரஸ்யமான ஆட்டத்தை காணலாம்.



    🌀முதலில் பம்பரக்கட்டை மற்றும் சாட்டையை கொண்டு இந்த விளையாட்டை தொடங்க வேண்டும். இரண்டு (அல்லது) பல பேர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.



    🌀உதாரணத்திற்கு ஐந்து பேர் சேர்ந்து விளையாடும் பொழுது, அனைவரும் பம்பரத்தை சாட்டையை கொண்டு சுற்றி ஒரே நேரத்தில் கீழே விட வேண்டும்.



    🌀கீழே விட்ட பம்பரம் சுழன்று கொண்டு இருக்கும், அந்த சமயத்தில் பம்பரத்தின் சாட்டையை கொண்டு பம்பரத்தை கையில் எடுக்க வேண்டும். இப்போட்டியில் கடைசியாக பம்பரத்தை எடுப்பவர், அவருடைய பம்பரத்தை ஒரு வட்டமிட்டு தரையில் வைக்க வேண்டும்.



    🌀மீதி உள்ளவர்கள் தங்களின் பம்பரத்தை மீண்டும் சுழற்றி விட்டு வட்டத்தில் உள்ள பம்பரத்தை தன்னுடைய பம்பரத்தால் வெளியில் எடுக்க முயற்சிக்க வேண்டும்.



    🌀இதேப்போல் இந்த விளையாட்டை தொடந்து விளையாடலாம். இப்படி விளையாடுவதன் மூலம் கைகள் வலுப்பெறுவதுடன் குழந்தைகளுக்கு இடையில் ஒற்றுமை உணர்வு மேம்படும்.







    🌀பம்பரம் விடும் விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர்களால் பரவலாக விளையாடப்பட்டது. இதில் ஓயாக்கட்டை, உடைத்த-கட்டை, பம்பரக்குத்து என மூன்று வகைகள் இடம்பெற்று இருந்தன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக