Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

இந்த சூழலில் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது- ராணுவ தளபதி

கொரோனா பாதிக்கும் இந்த  சூழலில் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என்று இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் காஷ்மீரில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நாரவனே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இதற்குஇடையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனா காரணமாக உலக நாடுகளும் இந்தியாவும் பிற பகுதிகளுக்கு மருந்துகளை அனுப்பி வருகின்றது.

ஆனால் பாகிஸ்தான் மட்டும் பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக