Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 ஏப்ரல், 2020

இந்தியாவில் கொரோனாவால் முதன்முறையாக மருத்துவர் பலி.!

இந்தியாவில் கொரோனா வைரசால் தினமும் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய , மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவால் இன்று வரை 5,734 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தூரை சார்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இன்று வரை மத்திய பிரதேசத்தில் 229 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!