Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

ஒரு தவளையும் ஒரு சுண்டெலியும்

ஒரு காட்டில் ஒரு தவளையும், ஒரு சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தவளை வாழ்ந்து வந்த குளத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது. அதனால் எலி அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்தது. இருவரும் சேர்ந்து குளத்தினருகில் சென்றவுடன் குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் எலி தன் இனத்தவரை ஆதரவுக்கு அழைத்தது.

தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் பார்த்தன. பருந்துகள் கீழே வந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள், தவளைகள் மீது பாய்ந்து அவைகளைத் தமக்கு இரையாக்கிக் கொண்டன.

நீதி :

எளியவன் தனித்து இருந்தால் அவனை வலியவன் வெல்வது எளிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக