கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களும் வேலையின்றி வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் சங்கர் – மாலினி, சரவண அமுதா இரு ஜோடிகளுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
அங்குள்ள வண்டி மலைச்சியம்மன் மற்றும் மலையன் சுவாம்னி கோயிகள்ல் இரு ஜோடிகளுக்கான திருமணம் நடைபெற்றது.
சமூக விலகலைக் கடைப்பிடித்து இரு மணமக்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்துகொண்டு, மனமக்களை வாழ்த்தியுள்ளனர்.
மேலும் ,இந்த திருமணம் 4 மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டதாகவும், இதற்கான திருமண அழைப்பிதழைக் காட்டி, இந்த ஊரடங்கல் காலத்தில் பாஸ் பெற்றுக் கொண்டுதான் உறவினர்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக