‘துருவங்கள் 16′ படத்தின் வெற்றியால் கவனத்துக்கு வந்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் இரண்டாவது படம்’நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பொருளாதாரச் சிக்கல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்தப் படத்தை முன்வைத்து கெளதம் மேனன் – கார்த்திக் நரேன் இருவருமே ட்விட்டரில் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘நரகாசூரன்’ படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா என்று ஆம், இல்லை எனத் தேர்வு செய்யச் சொல்லி சுமார் ஒரு மாதம் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டிருந்தார் இயக்குநர் கார்த்திக் நரேன். இதற்குப் பலரும் ஆம் என்றே பதிலளித்துள்ளனர். இதனால் விரைவில் டிஜிட்டலில் ‘நரகாசூரன்’ வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி இப்படம் இணையதளத்தில் வெளியாகும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.ஆனால் அதில் உண்மையில்லை என்றும் படம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீராமல் இணையத்திலும் வெளீயிட முடியாதென்றும் சொல்கிறார்கள்.
‘நரகாசூரன்’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘மாஃபியா’ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக