Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

கதை திருட்டு விவகாரம் - ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோ



சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஹீரோ’. 
மித்ரன்இப்படத்தை இயக்கியிருந்தார்ஹீரோ படகதைத் திருட்டு சம்பந்தமாக இயக்குனர் போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்றுசென்னை உயர் நீதிமன்றம் இடைகாலத்தடை வழங்கியதுஅதன்படிவேறுமொழிகளில் வெளியிட இடைக்காலத்தடைவிதித்தும்மொழிமாற்றம் [டப்பிங்மற்றும்சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்காலதடை விதித்து உத்தரவிட்டது.

ஆனால்தடையையும் மீறி தெலுங்கில் சக்திஎன்ற பெயரில் ஹீரோ படம் மொழி மாற்றம்செய்யப்பட்டு மார்ச் 20-ம் தேதி தெலுங்குத்திரையுலகில் வெளியாக உள்ளதாகவிளம்பரங்கள் செய்யப்பட்டதுஊரடங்குஉத்தரவால் வெளியாகவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் இறுதியில்அமேசான் பிரைம் என்ற இணையதளத்தில்ஹீரோ மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டசக்தி திரைப்படம் பதிவேற்றம்செய்யப்பட்டது.

இதுகுறித்து இயக்குனர் போஸ்கோ கூறும்போது,”ஹீரோ” திரைப்படம் வேறு எந்த மொழியிலும் எந்த வகையிலும் வெளியிடுவதற்கும் மற்றும் ஹீரோதிரைப்படத்தை டிஜிட்டல், இணையதளம்மற்றும் சாட்லைட் தொலைக்காட்சி எனஎதிலும்  வெளியாவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில், திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் 
பிரைம்இணையதளத்தில் வெளியானது.  

இதையடுத்து அமேசான் பிரைமுக்கு
இமெயில் மூலம்  நீதிமன்றத்தின் நகலைஅனுப்பினேன். இதைப் பார்த்த அவர்கள்ஆன்லைனில் இருந்து படத்தைநீக்கிவிட்டார்கள். 
விரைவில் நீதிமன்றத்தில்இருந்து நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக