Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 ஏப்ரல், 2020

முகத்தில் வழியும் எண்ணெய் பசையை போக்கி பளபளப்பாக்கும் குறிப்புகள்.....!!

எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சரிசெய்வது என்பதை பார்ப்போம்.
 
முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இம்முறையை தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை 
 
தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.  முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.
 
தக்காளி சாற்றில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இம்முறையை தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள். 
 
புதினா இலைகளை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை சுரப்பது தடுக்கப்படும். இம்முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரித்துக் காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!