>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 30 ஏப்ரல், 2020

    கொரோனாவுக்காக ஏலத்தில் களமிறக்கப்படும் ஹார்லி டேவிட்சன் புதிய மாடல்.!

    பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாகஇருக்கும் ஹார்லி டேவிட்சன் குறிப்பிட்ட மாடல் பைக்கை நேரடி ஏலத்தில் விடுவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசனான ஹார்லி-டேவிட்சன் லைவ்வையர் (Harley Davidson Livewire) ஏலத்தில் களமிறக்கப்பட உள்ளன. இவை எலக்ட்ரிக் ரக பைக்குகள் ஆகும். இந்த தகவல் பற்றிய இன்னும் சில செய்தி விவரங்களை கிழே காண்போம்.

    ஹார்லி டேவிட்சன் நடத்த இருக்கும் நேரடி ஏலத்தின் மூலமாக கிடைக்கும் மொத்த தொகையும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பயன்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஏலம் பற்றிய மற்ற விவரங்கள்  இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்த ஏலத்தில் Harley Davidson Livewire பைக் மடலானது இந்நிறுவனத்தின் முதல் முழு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் அறிமுகபடுத்தப்பட்டது. இந்த எலக்ட்ரிக் பைக் இந்த ஏலத்தில் கஸ்டம் பெயிண்ட் அமைப்பில்,  டேவிட்சன் குழுமத்தின் ஒப்புதலுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

    இந்த மாடல் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பு பணியில் மட்டும் இருந்தது. இந்த பைக் மாடலை அதிகப்பட்சமாக 78 kWh அல்லது 104.6 பிஎச்பி மற்றும் 116nm டார்க் திறனில் இயக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி சிங்கிள் சார்ஜில் நகர் உட்புற சாலைகளில் 258 கிமீ தூரமும், நெஞ்சாலைகளில் 158 கிமீ வரையிலும் பைக்கை இயக்க முடியும். இந்த மாடலில் 21 கிமீ இயக்க 1 மணிநேர சார்ஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் முழு சார்ஜ் ஏறிவிடும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக