Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

தைரியம் அவசியம் ! !

தைரியம் என்பது மனிதர்களுக்கு மிக மிக அவசியம். தைரியம் இல்லை என்றால் வாழ்க்கையில் எந்த ஒரு விசயத்தையும் எதிர்கொள்ள முடியாது.

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

காட்டில் முயல்கள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அந்த முயல்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது. அந்த முயல்கள் எந்த செயல்களையும் செய்ய முடியாத கோழைகளாக எண்ணி வாழ்ந்து வந்தன.

வேட்டைக்காரன் வந்தால் நம்மைத்தான் வேட்டையாடுகிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களும் நம்மைத்தான் அடித்து உண்ணுகின்றது. எனவே, நம் கூட்டம் இவ்வுலகில் வாழ எந்த தகுதியும் இல்லை, நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஏதேனும் ஒரு குளத்தில் விழுந்து இறந்து விடலாம் என முயல்களின் தலைவன் கூற அனைத்து முயல்களும் குளத்தை நோக்கிச் சென்றன.

அந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் வாழ்ந்து வந்தது. தவளைகள் கரையில் அமர்ந்திருந்தன. முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த தவளைகளின் தலைவன் முயல்கள் கூட்டமாக நம்மைத் தாக்கத்தான் வருகின்றன. நாம் கரையில் இருந்தால் ஆபத்து, உடனே குளத்தினுள் சென்று விடுவோம் என முடிவு செய்து குளத்தில் குதித்தன.

இதைப் பார்த்த முயல்கள், நாம் கோழைகள் தான், நமக்குத் தைரியமில்லை தான். ஆனாலும், நம்மை விடத் தைரியமில்லாதவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள். முயல்களை கண்டு தவளைகள் பயந்தன. தவளைகளைப் பொறுத்தவரை அவைகளை விட நாம் தைரியசாலிகள்.

நாம் இறக்கக் கூடாது, இனி தைரியத்தை வளர்த்துக் கொண்டு நம்மை யாரேனும் தாக்க நினைத்தால் நாலு கால் பாய்ச்சலில் நம்மை காத்துக்கொள்ளுவோம் என்று கூறியது முயல்களின் தலைவன்.

தத்துவம் :

நாம் எந்தச் சமயத்திலும் தைரியத்தை இழக்காமல் மன உறுதியோடு வாழ வேண்டும். அப்போது தான் நாம் எண்ணிய யாவும் வெற்றி பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக