>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 2 ஏப்ரல், 2020

    தனிமைப்படுத்தும் மையமாக மாறும் அரசு பள்ளிகள்- தமிழக அரசு முடிவு


    தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக அரசு பள்ளிகளை மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று நாளூக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இது வரையில் 200 மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மேலும் பரவலை தடுக்கவும்,கட்டுக்குள் கொண்டுவரவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 

    இந்நிலையில் கொரோனோ நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்புள்ள நபர்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக அரசு முடிவு எடுத்துள்ளது.

    அவ்வாறு தனிமைபடுத்தப்பட்டவர்களை எல்லாம் கண்காணிப்பதற்கு உகந்த வகையில் தமிழகத்தில்  உள்ள 2574 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை எல்லாம்  கொரோனா நோய்த்தொற்று மையங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது 37மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அரசு கேட்டு உள்ளதாம். 

    அரசு கேட்டு கொண்டதன் பொருட்டு பள்ளிகளின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசிற்கு அளித்து வருகின்றனர். எனவே விரைவில் அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்படும் என தெரிகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக