Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 16 ஏப்ரல், 2020

லுடோ விளையாடும்போது இரும்பிய நண்பரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

கிரேட்டர் நொய்டாவில் கொரோனா சம்பந்தப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. லுடோ விளையாடும் இரண்டு பேரில் ஒருவருக்கு இருமல் ஏற்பட்டதால், மற்றொரு நபர் அவரை சுட்டுக் கொன்றார். பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

டெல்லியை ஒட்டியுள்ள கிரேட்டர் நொய்டா அருகே உள்ள தயாநகர் என்கிற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெய்வீர் சிங் (30) என்பவரும் பிரசாந்த் சிங் (25) என்பவரும் விவசாயத் தொழில் செய்பவா்கள். இவர்கள் இருவரும் செவ்வாய்கிழமை லுடோ விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது பிரசாந்த் சிங்கிற்கு அடிக்கடி இருமல் வந்து கொண்டிருந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரப்புவதற்கே பிரசாந்த் சிங் வேண்டுமென்றே செய்கையில் ஈடுபடுவதாகக் கருதி தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் பிரசாந்த் சிங்கை ஜெய்வீர் சிங் சுட்டுவிட்டு ஓடியுள்ளார். 

படுகாயமடைந்த பிரசாந்த் சிங் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆபத்து கட்டத்தைத் தாண்டியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!